வாசகர் அனுபவம்

Tamil Book Reviews

Thursday, December 22, 2011

சு. வெங்கடேசனுக்கு சாகித்ய அக்கேடமி விருது

சு. வெங்கடேசனுக்கு சாகித்ய அக்கேடமி விருது


சு. வெங்கடேசனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.  சு. வெங்கடேசனின் 'காவல் கோட்டம்' நாவலுக்கு இந்த விருது அளிக்கப் பட்டுள்ளது.  காவல் கோட்டம் மிகச் சிறந்த படைப்பு.   பிரம்மாண்டமான படைப்பு.  அரண்மனை ஆவணங்களை கொண்டு எழுதப்படும் வரலாறுகளில்  இறந்த மன்னர்களின் சடலங்களும், அரண்மனைச் சதிகளும், போர் வெற்றிகளும் மட்டுமே ஓங்கி இருக்கும்.  சு. வெங்கடேசன், மதுரையின் கடந்த அறுநூறு கால வரலாற்றை, பெரும் சாம்ராஜ்யங்கள் தோன்றியும் மறைந்தும் போன வரலாற்றை, தாதனூர் என்ற கிராமத்தில் வாழ்ந்த கள்ளர்களின் வாழ்க்கையின் மூலம் விரித்துச் செல்கிறார்.   சு. வெங்கடேசன் நம்மை தாதனூர்காரர்களின் ரத்தமும், சதையும் கொண்டவாழ்க்கையோடு ஒன்றிப் பயணிக்கச் செய்கிறார்.  படித்து முடித்தவுடன், உண்மையிலேயே தாதனூர் என்ற ஊர் மதுரை அருகே இருக்கிறதா? என்று கேட்கத் தோன்றியது.   நுட்பமான தகவல்களும், நம் பண்பாட்டு விழுமியங்களும், இருளைப் பற்றிய விஸ்தாரமான விவரணைகளும், களவுக்கும் காவலுக்கும் இடையே உள்ளே உறவையும், எளிய வார்த்தைகளில், மிகையின்றிச் சொல்லும் நாவல் காவல் கோட்டம்.  தமிழ் வரலாற்று நாவல்களின் குறுகிய எல்லைகளை உடைத்தெறிந்து, சரித்திர நாவல்களின் தளத்தை காவல் கோட்டம் மிகவும் பெரிதாக்கி விட்டது என்று சொல்வது மிகையாகாது. 

சென்ற ஆண்டு நாஞ்சில் நாடனுக்கு சாஹித்ய அகடெமி விருது.  இன்றைக்கு சு. வெங்கடேசனுக்கு விருது.  இப்படித் தரம் வாய்ந்த எழுத்துக்களுக்கு விருது கொடுப்பதின் மூலம், சாகித்ய அகாடமி தன்னை கௌரவித்துக் கொண்டது என்று தான் சொல்ல முடியும்.  மீண்டும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.  சு. வெங்கடேசனின் முகவரி அல்லது மின்னஞ்சல் யாரிடமாவது இருந்தால் சொல்லுங்கள். 

காவல் கோட்டத்தை தன் விரிவான விமரிசனம் மூலம் அடையாளம் காட்டியதற்கு ஜெயமோகனுக்கும் நன்றி சொல்ல வேண்டும்.  அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

காவல் கோட்டம் பற்றிய விமரிசனங்கள்:

ஜெயமோகன் - காவல் கோட்டம் பற்றி (பாகம் 1)

ஜெயமோகன் - காவல் கோட்டம் பற்றி (பாகம் 2)

ஜெயமோகன் - காவல் கோட்டம் பற்றி (பாகம் 3)

ஜெயமோகன் - காவல் கோட்டம் பற்றி (பாகம் 4)

ஜெயமோகன் - காவல் கோட்டம் பற்றி (பாகம் 5)


ஆ. இரா. வெங்கடாசலபதி

மேலாண்மை பொன்னுச்சாமி

காவல் கோட்டத்தைப் பற்றிய முந்தைய பதிவு

காவல் கோட்டம்; ஆசிரியர்: சு. வெங்கடேசன். பதிப்பகம்: தமிழினி.
Raja M 1 comment:
Share

Wednesday, September 14, 2011

பண்டைய இந்தியா : பண்பாடும் நாகரிகமும் :தொகுப்பு


 பண்டைய இந்தியா : பண்பாடும் நாகரிகமும்: தொகுப்பு 
ஆசிரியர்:   டி.டி.கோசாம்பி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
தமிழாக்கம்: ஆர். எஸ். நாராயணன் (எஸ்.ஆர்.என். சத்யா)
பரிந்துரை: சண்முகம் / கரிகாலன்
  








டி. டி. கோசாம்பியின் 800 பக்கங்களே கொண்ட ௦௦புத்தகமான பண்டைய இந்தியாவைப் பற்றி எழுத ஆரம்பித்த போது அது இவ்வளவு நீளமாக வரும் என்று நாங்கள் இருவரும் நினைக்கவில்லை.  இந்தப் புத்தகத்தின் நடை கொஞ்சம் கடினமாக இருந்தாலும்,  கொஞ்சம் ஊன்றிப் படிக்க ஆரம்பித்ததில், கோசாம்பி இந்திய வரலாற்றை அணுகிய விதம் நாங்கள் இதுவரை படித்த இந்திய வரலாற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்று புலப்பட்டது.  அதனால், இந்தப் புத்தகத்தில் கோசாம்பி கூறியவற்றை முடிந்த அளவிற்கு தொகுத்து எழுத வேண்டும் என்ற எண்ணம் எங்கள் இருவருக்கும் வந்தது. அதன் விளைவே இந்த நீண்ட தொடர். உண்மையில் சொல்லப் போனால், இதை எழுதியதில் முக்கிய பலன் எங்கள் இருவருக்கும் தான் என்று சொன்னால் மிகையில்லை. 

Raja M 1 comment:
Share

Friday, September 2, 2011

இட்டு, உண்டு, இரும்

 

Give, Eat, And Live

Poems of Avvaiyar

Translated from the Tamil by
Thomas H Pruiksma
Red Hen Press
USD: $17.95
Available in Amazon.com
Review: Karikalan



ஔவையாரின் பாடல்களைத் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார் அமெரிக்கக் கவிஞர் திரு. ப்ரூக்சிமா .  நான் இந்தப் புத்தகத்தை முதலில் இணையப் புத்தகக் கடையான அமேசானில் பார்த்த போது சற்றே திகைப்புக் கலந்த ஆர்வத்துடன் வாங்கினேன்.  வாங்கிப் படித்தபோது மொழி பெயர்ப்பின் தரத்தைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.  இந்த மொழி பெயர்ப்பில் இருக்கும் பல பாடல்கள் நான் சிறுவனாக இருக்கும் போது அறிந்தவையே.  ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒய்வு பெற்ற பள்ளி ஆசிரியையாக இருக்கும் என் தாயார், இன்றும் கூட, ஔவையாரின் பாடல்களின் முதல் வரியை எடுத்துக் கொடுத்தால் சரளமாக முழுப் பாட்டையும் சொல்கிறார்கள்.  இந்தப் பாடல்கள் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார் எழுதியது எனக் கருதுகிறார்கள்.  சங்க கால ஒளவையார் பாடல்கள் அல்ல இவை. 

Raja M 3 comments:
Share

Give, Eat, And Live (இட்டு உண்டு இரும்)

Give, Eat, And Live

Poems of Avvaiyar

Translated from the Tamil by
Thomas H Pruiksma
Red Hen Press
USD: $17.95
Available in Amazon.com
Review: Karikalan



When I saw the English translation of Avvaiyar's poems from the Tamil by  Mr. Pruiksma on Amazon.com, I bought it out of curiosity.   I knew many of Avvaiyar's poems in my childhood.  My mother retired as a school teacher over fifteen years ago, and to this day, she can recite many of Avvaiyaar's poems. These poems are thought to be written around the twelfth century AD by the Avvaiyar of the later period, unlike the Avvaiyaar of the Sangam era.

Raja M 1 comment:
Share

Sunday, August 28, 2011

சாவு நிகழ்த்தும் உரையாடல்


நாவல் : இடைவெளி
ஆசிரியர் : எஸ். சம்பத்
முதற்பதிப்பு : 1984
பக்கங்கள் : 108
       எஸ். சம்பத்தின் அச்சு வடிவம் கண்ட ஒரே நாவல் இடைவெளி. இந்த ஒரு நாவல் மூலமே தமிழ் இலக்கிய உலகில் அழியாத இடம் பிடித்து விட்டார். சம்பத். இந்த நாவல் பற்றி எழுத்தாளர்களும், இலக்கிய விமர்சகர்களு ஒருசேரப் புகழ்ந்து எழுதியுள்ளதையெல்லாம் படித்திருக்கிறேன். ஒருமுறை அய்யனார் தன் தளத்தில் இடைவெளி பற்றிய தன் வாசக அனுபவத்தை எழுதியிருந்தார். எழுத்தாளர் திலீப் குமாரிடமிருந்து அந்த நாவலை ஒளிநகலெடுத்து வைத்துக் கொண்டதாகவும், அதை மின் புத்தகமாக மாற்றி வைத்திருப்பதாகவும் எழுதியிருந்தார். அதன் பிரதியொன்று அனுப்பித்தர இயலுமா என்று கேட்டிருந்தேன். உடனே செய்தார். அவருக்கு நன்றி.
Jegadeesh Kumar 12 comments:
Share

Thursday, August 18, 2011

தீராக்காதலி - டெலிபோன் டைரக்டரி

தீராக்காதலி
ஆசிரியர் : சாரு நிவேதிதா
பதிப்பகம்: உயிர்மை
விலை: ரூ 80 


"இது போலெல்லாம் ஒரு புத்தகம் வருமா, என்ன தவம் செய்தோனோ இதைப் படிக்க", என்றெல்லாம் ஒரு ரசிகர் கண்ணீர் மல்கி நெக்குருகி சாருவின் வலைத்தளத்தில் எழுதி இருந்தார்.  போதாக்குறைக்கு, 'காப்பியத் துயரத்தை சாரு வாசகர்களின் இதயத்தில் பரவச் செய்கிறார்' என்றும் பின்னட்டையில் போட்டிருந்தது.   ஏதோ விஷயம் இருக்கிறது என்றும், சாரு கட்டுரைகளை நன்றாக எழுதுவார் என்று நம்பியும் இந்தக் கட்டுரைத் தொகுப்பை வாங்கிப் படித்தேன்.
clayhorse 5 comments:
Share

Monday, June 20, 2011

பண்டைய இந்தியாவில் புரட்சியும், எதிர்ப்புரட்சியும் : அம்பேத்கர் - பாகம் 1




பண்டைய இந்தியாவில் புரட்சியும், எதிர்ப்புரட்சியும்
ஆசிரியர்: பாபாசாகேப் அம்பேத்கர் - பாகம் 1
பரிந்துரை: சண்முகம்


ஆரியர்களின் வரவு - ஆரிய சமூகம் - யாகபலிகள் - புத்தர் வருகை - மனுஸ்மிருதி - சதுர்வர்ண முறை - சாதிச்சமூகம் - சாதியும் தேசமும் - இந்தியாவில் விஞ்ஞானம் - படிப்படியான சமத்துவமின்மை - பௌத்தத்தின் வீழ்ச்சியும் நலிவும் - இந்து சமய இலக்கியங்கள் - பகவத்கீதை - பெண்களின் நிலை


 அம்பேத்கர் பல கால கட்டங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகை நூல் இது. இந்திய அரசியல் சாசனத்தை வடித்தவராகிய அம்பேத்கர் ஒரு வரலாற்று ஆய்வாளரும் கூட. பண்டைய இந்தியா குறித்த அவரது ஆய்வுகளும் கருத்துக்களும் இந்திய சமூக வரலாற்றைத தெரிந்து கொள்ள விரும்பும் எவருக்கும் இன்றியமையாதது.
sammuvam 1 comment:
Share

பண்டைய இந்தியாவில் புரட்சியும், எதிர்ப்புரட்சியும் : அம்பேத்கர் - பாகம் 2




பண்டைய இந்தியாவில் புரட்சியும், எதிர்ப்புரட்சியும்
ஆசிரியர்: பாபாசாகேப் அம்பேத்கர் - பாகம் 2
பரிந்துரை: சண்முகம்


இப்பொழுது இந்து சமய இலக்கியங்களைப் பற்றிப பார்ப்போம்.

பல நூற்றாண்டுகாலத் தொடர்ச்சியில், இராமாயணம் மூன்று பதிப்புகளாக வந்திருக்கிறது. முதல் பதிப்பில், ஒரு வரலாற்றுக் கதையாக - இராமனின் மனைவி சீதையை அபகரித்துச் சென்ற இராவணனுடன் இராமன் புரிந்த போர், என்ற சிறு கதையாக மட்டுமே இருந்தது. இரண்டாவது பதிப்பில், கதையுடன், சமூகம் நீதி சமயம் தொடர்பாக மக்கள் ஆற்ற வேண்டிய போதனை நூலாகப் பரிணமித்தது. மூன்றாவது பதிப்பில், மேலும் தொல்கதைகள், தத்துவங்கள், அறிவு, கல்வி, அறிவியல்கள் ஆகிய அனைத்தும் கொண்ட கருவூலமாக முற்று பெற்றது.
sammuvam 1 comment:
Share

Thursday, June 16, 2011

உயிர்த்தண்ணீர் - கண்மணி குணசேகரன்




உயிர்த்தண்ணீர்
ஆசிரியர்: கண்மணி குணசேகரன்பரிந்துரை: சண்முகம்

பீக்காட்டுல தொடச்சிப் போட்ட கல்லு மாதிரி, சமுதாயத்தில தொடச்சிப் போட்ட சனங்களை, நம்ப கண் முன்னாடி வரையாரு கண்மணி குணசேகரன். (என்னமா நல்ல பேரு வச்சிருக்காரு ! ). நடுநாடுன்னு சொல்றாங்களே - அதாவது நெய்வேலி, கடலூர், பண்ருட்டின்னு - இப்படி இங்கிருந்து யாரோ ஒரு நல்ல கதை சொல்றவரு கதையை நேர்ல சொன்னா எப்படி இருக்குமோ, அப்படியே எழுத்துல சொல்லியிருக்காரு கண்மணி. இந்தக் கொச்சையான வட்டார சொல்நடை, மொத கொஞ்சம் கடுப்பாத் தான் இருந்துச்சி. ஆனா போகப்போக ருசிக்க ஆரம்பிச்சிருச்சி. (கி.ரா, இது தான் நெசமான மக்கள் தமிளு, நாம சாதரணமா படிக்கிறதெல்லாம் மொண்ணெத் தமிளும்பாரு. )

sammuvam 4 comments:
Share

Wednesday, June 8, 2011

பண்டைய இந்தியா : பாகம் 5




பண்டைய இந்தியா : பண்பாடும் நாகரிகமும்
ஆசிரியர்: டி.டி.கோசாம்பி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
தமிழாக்கம்: ஆர். எஸ். நாராயணன் (எஸ்.ஆர்.என். சத்யா)
பரிந்துரை: சண்முகம் / கரிகாலன்
பாகம் 5







நிலப்பிரபுத்துவத்தின் வாசலில்

மகதப் பேரரசு ஒரு சில நூற்றாண்டுகளிலேயே மிக விரைவாக எழுந்தது.  அசோகரின் காலத்தில் அதன் உச்சத்தை அடைந்தது.  மகதப் பேரரசு பின் பற்றிய அரசியல் கொள்கைகள் ஆட்சி நீடித்து நிலைப்பதற்கான வழியை  வகுத்தது.  அசோகரின் ஆட்சியில் உச்சத்தில் இருந்த மகதப் பேரரசு, அடுத்த பதினைந்து நூற்றாண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக சீரழிந்தது.   அந்தச் சீரழிவின் முடிவில் இந்தியாவில் நிலப் பிரபுத்துவத்தின் விதைகள் விதைக்கப்பட்டு முளை விடத் துவங்கின என்கிறார் கோசாம்பி.  கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இருந்து, கி.பி. பத்தாம் நூற்றாண்டு வரையான வரலாற்றின் சாரத்தை இந்தப் பகுதியில் பார்ப்போம்.  இந்த காலகட்டத்தில் நிகழ்ந்த மாறுதல்கள் தற்கால இந்தியாவில் காணலாம்.  குறிப்பாக முன்று விஷயங்களைக் குறிப்பிடுகிறார் கோசாம்பி.   அவை: 1 இந்தியாவை கட்டமைத்ததில் சமயத்தின் பங்கு; 2 . நிலப்பிரபுத்துவத்தின் தொடக்கம்; 3. பக்தியும் விசுவாசமும். இவற்றை விரிவாகக் காண்போம்:

1 . இந்தியாவைக் கட்டமைத்ததில் புரோகிதத்தின் பங்கு

இக்காலத்தில் புத்த மதத்தின் வளர்ச்சி, பலிகளையும், சடங்குகளையும் போற்றி வளர்த்து வந்த பழைய பிராமண வாழ்க்கை முறையை முற்றிலும் வலுவிழக்க வைத்து விட்டது.  இருப்பினும், பழங்குடிகளின் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்த, பிறப்பு, இறப்பு, அறுவடை, திருமணம் போன்ற நிகழ்சிகளில் சடங்குகளுக்கு முக்கியத்துவம் இருந்தது.   சடங்குகளை வெறுத்த பெளத்தர்களோ, ஆசிவர்களோ இந்த வேலைகளை செய்ய முனையவில்லை.  இந்த வேலைகளை சடங்குகளில் மிகவும் பரிச்சயம் இருந்த புரோகிதர்கள் ஆர்வத்துடன் எடுத்து நடத்த ஆரம்பித்தனர்.

Raja M 2 comments:
Share

Sunday, May 22, 2011

பிற தளங்களில் இருந்து..


 பெயர்: உலோகம்
பக்கம்: 216
வருடம்: 2010
விலை: 50 ரூபாய்கள்

கிழக்குப் பதிப்பகம் 







 
ஜெயமோகனின் 'உலோகம்' நாவலை, 'விருட்சம்' அவர்கள் பரிந்துரை செய்துள்ளார்.  அவர் கேட்டுக் கொண்டபடி அந்தப் பரிந்துரையைக் கீழ்க்காணும் சுட்டியில் காணலாம்.
"http://www.virutcham.com/2011/02/உலோகம்-புத்தக-விமர்சனம்/ ".

புத்தகம் கிடைக்கும் இடம் "https://www.nhm.in/shop/978-81-8493-588-2.html"

clayhorse 1 comment:
Share

Sunday, May 1, 2011

பண்டைய இந்தியா - பாகம் 4




 
பண்டைய இந்தியா : பண்பாடும் நாகரிகமும்
ஆசிரியர்: டி.டி.கோசாம்பி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
தமிழாக்கம்: ஆர். எஸ். நாராயணன் (எஸ்.ஆர்.என். சத்யா)
பரிந்துரை: சண்முகம் / கரிகாலன்




பாகம் 4


புதிய மதங்களின் எழுச்சியும், பேரரசுகளின் தோற்றமும்

யசுர் வேத காலத்தில் பெருமளவில் கால் நடைகளையும், பிற பொருட்களையும் யாகத்தில் அளிப்பது வாழ்க்கையின் பெரும் அம்சங்களாக இருந்தது. யாகங்களை முன்வைத்து அக்கால பிராமணர் பெரும் செல்வத்தை  நாடினர். அது போலில்லாமல்  அதற்கு நேர் எதிர்மறையாக, மிகவும் சமூக நோக்கு கொண்டதாக புத்த மதத்தின் எழுந்தது.  உயிர்க்கொலை புரிதல் கூடாது, பிக்ஷுக்கள் மிக எளிமையான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற புத்த மதக் கொள்கைகள் சாதாரண மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன.  புத்த பிக்ஷுவின் லௌகீகத் தேவைகள் மிகவும் சொற்பமானவையாக வரையறுக்கப்பட்டிருந்தது. 

Raja M 1 comment:
Share

Thursday, March 10, 2011

பண்டைய இந்தியா - பாகம் 3








பண்டைய இந்தியா : பண்பாடும் நாகரிகமும்



ஆசிரியர்: டி.டி.கோசாம்பி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
தமிழாக்கம்: ஆர். எஸ். நாராயணன் (எஸ்.ஆர்.என். சத்யா)
பரிந்துரை: சண்முகம் / கரிகாலன்





பாகம் 3


ஓராயிரம் சதுர மீட்டர் அளவில், வேட்டைத் தொழிலையும், உணவு சேகரித்தலையும் மட்டுமே நம்பி ஒரு மனிதன் தான் வாழ முடியும். ஆனால், அதே நிலத்தில், ஓரளவிற்கு உணவு உற்பத்தி முறையை அறிந்த, விவசாயத்தின் அனுகூலங்களை அறிந்த, சமுதாயத்தில் நூறு பேருக்கு மேல் வாழ முடியும்.

உணவு சேகரித்து வாழ்ந்த பூர்வ குடி மக்கள், தங்களை விட மிக நேர்த்தியான உணவு உற்பத்தி முறைகளைக் கொண்ட ஆரிய சமூகத்தை நேர்கொண்ட போது அதீதமான பாதிப்புகளுக்கு உள்ளானது இயற்கையே. இப்படி இந்த இரு மாறுபட்ட சமூகங்களின் உரசலினால் வன்முறை உண்டாயிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. வன்முறையை தவிர்த்தது சாதி அமைப்பு என்கிறார் கோசாம்பி.
sammuvam 3 comments:
Share

Friday, March 4, 2011

பண்டைய இந்தியா - பாகம் - 2




பண்டைய இந்தியா : பண்பாடும் நாகரிகமும்



ஆசிரியர்: டி.டி.கோசாம்பி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
தமிழாக்கம்: ஆர். எஸ். நாராயணன் (எஸ்.ஆர்.என். சத்யா)
பரிந்துரை: சண்முகம் / கரிகாலன்


பாகம் 2


வரலாற்றுக்கு முற்பட்ட மனிதனின் (pre-historic man) தேவைகள் உலகெங்கும் ஒத்து இருந்தன.  வாழ்ந்த புவி, தட்ப-வெட்ப சூழலுக்கு ஏற்ப அவன் கருவிகளை ஏற்படுத்தி, தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முயன்றான்.  பின்னர், பூர்வகுடி மனிதனின் வாழ்க்கையை இந்தியச் சூழலில் நமக்குக் கிடைக்கும் ஆதரங்களுடன் பொருத்திப் பார்க்கும் பொது, பல சுவாரஸ்யமான விஷயங்களை (இந்தியாவின் சாதி அமைப்பின் அடித்தளங்களையும் கூட) யூகிக்க முடியும் என்கிறார் கோசாம்பி.


முதலில் உலகெங்குக்கும் பொதுவான வரலாற்றுக்கு முற்பட்ட மனிதனின் வளர்ச்சி ஒரு பழங்குடி அமைப்பைத் (Tribal Organization) தோற்றுவித்தது.   இது எப்படி என்று பார்ப்போம்.

Raja M 1 comment:
Share

Friday, February 25, 2011

பண்டைய இந்தியா : பண்பாடும் நாகரிகமும் - 1

பண்டைய இந்தியா : பண்பாடும் நாகரிகமும்
ஆசிரியர்:   டி.டி.கோசாம்பி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
தமிழாக்கம்: ஆர். எஸ். நாராயணன் (எஸ்.ஆர்.என். சத்யா)
பரிந்துரை: சண்முகம் / கரிகாலன்
  
 பாகம் 1

வரலாறு முக்கியம்.     ஏன் ? 

இந்தியாவில் பிறந்து வளர்ந்த தகுதியால் மட்டுமே இந்தியாவைப் பற்றி எனக்கு நிறையத் தெரியும் என்ற   நம்பிக்கையை  பொய்யாக்கும்  அபுனைவு 'பண்டைய இந்தியா'.   பண்டைய இந்தியாவைப் புரிந்து கொள்வது,   இன்றைய இந்தியாவைப் புரிந்து கொள்வதற்கு மிகவும் தேவை.    இதையே,   சுருக்கமாக நூலாசிரியர் கோசாம்பி பின்வருமாறு  சொல்கிறார்:

"நிகழ்காலத்தைப்   பற்றி   கடந்தகாலத் தெளிவுடன் அறிவது,   கடந்த காலத்தை நிகழ்காலத் தெளிவுடன் அறிந்து கொள்வதற்கு ஒப்பாகும்"
 

Raja M 2 comments:
Share

Friday, January 14, 2011

மானசரோவர்

 மானசரோவர்
ஆசிரியர் : அசோகமித்திரன்
பதிப்பகம் : கிழக்கு
பக்கங்கள் : 207
விலை : ரூ. 90



மானசரோவர் திரையுலகை மையமாக வைத்து அசோகமித்திரன் எழுதியுள்ள மற்றுமொரு நாவல். அவரது மிகப் பிரபலமான இன்னொரு நாவலான கரைந்த நிழல்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். சுஜாதாவின் கனவுத் தொழிற்சாலை என்ற ஒரு அருமையான நாவலை வாசித்தது நினைவுக்கு வருகிறது. மானசரோவரில் அசோகமித்திரனின் கண்களினூடாக நாம் பார்க்கும் திரையுலகம் மட்டுமல்ல, அதை ஆதாரமாகக் கொண்டு வாழும் மனிதர்களும், அவர்களின் வினோத குணங்களும் காணக்கிடைக்கின்றன.
Jegadeesh Kumar 1 comment:
Share

Monday, January 10, 2011

ரெயினீஸ் ஐயர் தெரு




     ரெயினீஸ் ஐயர் தெரு
ஆசிரியர் : வண்ணநிலவன்
பதிப்பகம் : கிழக்கு
பக்கங்கள் : 94
விலை : ரூ. 70
பரிந்துரை: ஜெகதீஷ் குமார்


       எதிரும் புதிருமாக ஆறே வீடுகளைக் கொண்ட சிறிய தெருவைக் களமாகக் கொண்டு ஒரு அழகான சிறிய நாவலைப் படைத்திருக்கிறார் வண்ணநிலவன். வாசிக்க ஆரம்பித்து மூன்று மணி நேரத்தில் ஒரே மூச்சில் படித்து முடித்து விட்டேன். சற்று நேரம் அமர்ந்து அமைதியாக யோசித்துப் பார்த்தால் நம்மைச் சுற்றி வாழும் மனிதர்களுக்கு நாம் எந்த அளவில் நம் வாழ்வில் மரியாதையும் நேசத்தையும் கொடுக்கிறோம் என்று நமக்குத் தெரிந்து விடும். காரணங்களற்ற நேசம் யார் மீதும் கொண்டு விடுவதில்லை நாம். நம் சுய நலக் காரியங்களைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு மட்டுமே அன்னிய மனிதர்களது இருப்பு அவசியமாகிறது நமக்கு. வண்ணநிலவனின் எழுத்தை வாசிக்கும் போது அண்டை மனிதர்களை நேசிக்கத் தவறும் குற்ற உணர்ச்சி இயல்பாகவே நம்முள் எழுகிறது.
Jegadeesh Kumar 4 comments:
Share
‹
›
Home
View web version
Powered by Blogger.