Showing posts with label S. ramakrishnan. Show all posts
Showing posts with label S. ramakrishnan. Show all posts

Friday, October 1, 2010

உப பாண்டவம்

  நாவல் :         உப பாண்டவம்
  ஆசிரியர் :  எஸ்.ராமகிருஷ்ணன்
  வெளியீடு : விஜயா பதிப்பகம்
  பக்கங்கள் :  384
  விலை :     ரூ. 200
  பரிந்துரை : ஜெகதீஷ் குமார்
        உப பாண்டவம் மகாபாரதம் என்கிற இதிகாசத்தின் எண்ணற்ற கதாபாத்திரங்களின் நாம் பார்த்திராத பக்கங்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது. திரேதாயுகத்தில் விளங்கின அஸ்தினாபுரத்துக்குள்ளும், இந்திரப் பிரஸ்தத்துக்குள்ளும் யுத்தபூமியான குருக்ஷேத்திரத்துக்குள்ளும் சமகால மனிதனொருவன் பயணப்பட்டுத் தான் அடைந்த அனுபவங்களை விவரிப்பதைப் போலவே முழுக்கதையும் அமைந்துள்ளது. நாவல் என்றால் என்ன என்பதற்கான இலக்கண விதிகள் யாவை என்று எனக்கு முழுமையாகத் தெரியாததால், உப பாண்டவத்தில் அவை எத்தனை தூரம் மீறப்பட்டிருக்கின்றன என்று சொல்ல முடியவில்லை. இருப்பினும் நாம் வாசித்து வருகின்ற வழக்கமான நாவல் வரிசையில் உபபாண்டவத்தைச் சேர்த்து விட முடியாதென்றே தோன்றுகிறது. (இது போன்று நீட்டி முழக்குவதற்கு நான் ஒன்றும் அப்படி நிறைய நாவல்கள் படித்தவனல்லன். என் அனுபவத்தின் அடிப்படையிலேயே நான் மேற்கண்ட கருத்தைக் குறிப்பிட்டேன்.)

Saturday, July 24, 2010

யாமம் – கூடிக் கதை பேசும் மிகு சுடர்கள்

நாவல்      : யாமம்
ஆசிரியர்  : எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம் : உயிர்மை
பரிந்துரை : ஜெகதீஷ் குமார்.

உயிர்மை வெளியீடாக வந்திருக்கும்  எஸ். ராமகிருஷ்ணனின்  நாவலான 'யாமம்' சமீபத்தில் வாங்கி வந்து வாசித்தேன்.  ஏற்கனவே கதாவிலாசம், அயல் சினிமா போன்ற நூல்களை வாசித்திருப்பினும் அவரது புனைகதை ஒன்றைப் படிப்பது, (சிறுகதைகள் தவிர்த்து ) இதுவே முதல். அறிமுகமே தேவையில்லாத எழுத்தாளர் எஸ்.ரா. கீழைத்தேய மரபையும், மேற்கத்திய கலாசாரம் அதில் ஊடுருவுவதையும் வைத்து அவர் எழுதியுள்ள நாவலான யாமம் ஒரு புதுமையான வாசிப்பனுபவத்தைத் தருகிறது.

கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மக்கள் உறங்கச் சென்றபின்  அவ்வீட்டின்  விளக்குகளின்  சுடர்கள்  அனைத்தும்  ஒன்று  கூடி  அம்மனிதர்களின் குண  இயல்புகளையும்,  ஆசைகளையும்  ஏக்கங்களையும்  பற்றி உரையாடி விட்டுத் திரும்புகின்றன என்று   நாவலின்  முன்னுரையில்   எஸ்.ரா.  குறிப்பிடுகின்றார்.  அந்தச் சுடர்களைப் போலவே சற்று நேரமாவதுப் பரிமளத்தோடு இருந்து மறைந்து போன மனிதர்களின் கதைகளின் தொகுப்பாகத்தான் யாமம் இருக்கிறது.  யாமம் என்பது ஒருவகை  அத்தரின் பெயர்.  எந்நேரத்திலும் இருளைக் கவிய வைக்கும், காமத்தைத் தூண்டும் வல்லமை கொண்டது யாமம்.  நாவலின் பெயர்தான் யாமமே தவிர, இது யாமம் என்கிற அத்தர் பற்றின கதை அல்ல.

Friday, April 9, 2010

உறுபசி (1) : தீரா வலியின் ருசி


உறுபசி
ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் 
பதிப்பகம்: உயிர்மை
விலை: ரூ. 75/-



'நாற்பத்தி இரண்டே வயதில், கல்யாணமாகிய ஓரிரு வருடங்களிலேயே,  அரசாங்க ஆசுபத்திரியில் இறந்து போகிறான் சம்பத்', என அதிர்ச்சியுடன் நாவல் ஆரம்பம் ஆகிறது.  அவன் இறுதிக் காரியங்களை முடித்த கையுடன், அவனது நண்பர்கள் துரைசாமி, அழகர், மாரியப்பன், மற்றும் சம்பத்தின் மனைவி ஜெயந்தி ஆகியோரின்  நினைவுகளின் வாயிலாக (flashback), சம்பத்தின் வாழ்க்கைப் பரிணாமத்தைக்  கொஞ்சம், கொஞ்சமாக விவரித்துக் கொண்டே செல்கிறார் ஆசிரியர் எஸ்.ரா.

கதையின் முதல் தளம், புறவயமான நிகழ்வுகள்.  நால்வரும் கல்லூரியில் பெண்களே இல்லாத தமிழ்ப் பிரிவில், ஒன்றாகப் படித்தவர்கள்.  

உறுபசி (2) : மதிப்புரை: திருமதி. மீனா நா. சுவாமி



உறுபசி
ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் 
பதிப்பகம்: உயிர்மை
விலை: ரூ. 75/-

பட உதவி: jungle cookie

ஒரு இளைஞன் ஒத்துதவி வாழாமல் இயற்கை நியதி, சமூக நியதியை விட்டு விலகி, தன உயிராற்றலை இழந்து மரணத்தை எட்டும் ஒரு சோகம் நிறைந்த கதை.  சம்பத், நம் மனதில் துன்பத்தின் உருவாக நிலைத்து விடுகிறான்.  'கசப்பின் கோப்பை' கை தவறிக் கவிழ்ந்து சம்பத் துன்பத்தையே அனுபவிப்பதை என் மனம் நம்ப மறுக்கிறது.