குள்ளச் சித்தன் சரித்திரம் :
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம்
ஆசிரியர் : யுவன் சந்திரசேகர்
சில மாதங்களுக்கு முன்பு ஜெயமோகன் அவர்களைச் சந்தித்தபோது, தற்கால எழுத்தாளர் ஒருவரை சிபாரிசு செய்யக் கேட்டேன். சிறிதும் தயக்கம் இல்லாமல் யுவன் சந்திரசேகரைக் குறிப்பிட்டார்.சமீபத்தில் உயிர்ம்மையில் யுவன் எழுதிய சிறுகதை வெளி வந்தது.சரியாகப் புரியா விட்டாலும், கதை என்னவோ மனதைக் குடைந்து கொண்டே இருந்தது. 'குள்ளச்சித்தன் சரித்திரம்' ஏதேச்சையாக அகப்பட்ட போது, இம்முறை யுவனின் மாய உலகத்திற்குள் எப்படியும் பிரவேசித்துவிட வேண்டும் எனக் கறுவிக்கொண்டேன்.
'மாற்று மெய்ம்மை' என அடிக்கடி தட்டுப் படுகிறதே என்று தேடியதில் கிடைத்தது இந்தச் சுட்டி.
http://en.wikipedia.org/wiki/Parallel_universe_(fiction). இது என்னவெனில், நாம் காணும் உலகத்தைப் போல், இன்னும் பல உலகங்கள் ஒரே சமயத்தில் சஞ்சரிக்கும் சாத்தியக்கூறை, கதை சொல்லும் உத்தியாகக் கையாள்வதைப் பற்றியது.