ஔவையாரின் பாடல்களைத் தமிழில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார் அமெரிக்கக் கவிஞர் திரு. ப்ரூக்சிமா . நான் இந்தப் புத்தகத்தை முதலில் இணையப் புத்தகக் கடையான அமேசானில் பார்த்த போது சற்றே திகைப்புக் கலந்த ஆர்வத்துடன் வாங்கினேன். வாங்கிப் படித்தபோது மொழி பெயர்ப்பின் தரத்தைக் கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இந்த மொழி பெயர்ப்பில் இருக்கும் பல பாடல்கள் நான் சிறுவனாக இருக்கும் போது அறிந்தவையே. ஏறத்தாழ பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒய்வு பெற்ற பள்ளி ஆசிரியையாக இருக்கும் என் தாயார், இன்றும் கூட, ஔவையாரின் பாடல்களின் முதல் வரியை எடுத்துக் கொடுத்தால் சரளமாக முழுப் பாட்டையும் சொல்கிறார்கள். இந்தப் பாடல்கள் 12 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒளவையார் எழுதியது எனக் கருதுகிறார்கள். சங்க கால ஒளவையார் பாடல்கள் அல்ல இவை.
Friday, September 2, 2011
Give, Eat, And Live (இட்டு உண்டு இரும்)
Give, Eat, And Live
Poems of Avvaiyar
Translated from the Tamil by
Thomas H Pruiksma
Red Hen Press
USD: $17.95
Available in Amazon.com
Review: Karikalan
When I saw the English translation of Avvaiyar's poems from the Tamil by Mr. Pruiksma on Amazon.com, I bought it out of curiosity. I knew many of Avvaiyar's poems in my childhood. My mother retired as a school teacher over fifteen years ago, and to this day, she can recite many of Avvaiyaar's poems. These poems are thought to be written around the twelfth century AD by the Avvaiyar of the later period, unlike the Avvaiyaar of the Sangam era.
Sunday, August 28, 2011
சாவு நிகழ்த்தும் உரையாடல்
நாவல் : இடைவெளி
ஆசிரியர் : எஸ். சம்பத்
முதற்பதிப்பு : 1984
பக்கங்கள் : 108
எஸ். சம்பத்தின் அச்சு வடிவம் கண்ட ஒரே நாவல் இடைவெளி. இந்த ஒரு நாவல் மூலமே தமிழ் இலக்கிய உலகில் அழியாத இடம் பிடித்து விட்டார். சம்பத். இந்த நாவல் பற்றி எழுத்தாளர்களும், இலக்கிய விமர்சகர்களு ஒருசேரப் புகழ்ந்து எழுதியுள்ளதையெல்லாம் படித்திருக்கிறேன். ஒருமுறை அய்யனார் தன் தளத்தில் இடைவெளி பற்றிய தன் வாசக அனுபவத்தை எழுதியிருந்தார். எழுத்தாளர் திலீப் குமாரிடமிருந்து அந்த நாவலை ஒளிநகலெடுத்து வைத்துக் கொண்டதாகவும், அதை மின் புத்தகமாக மாற்றி வைத்திருப்பதாகவும் எழுதியிருந்தார். அதன் பிரதியொன்று அனுப்பித்தர இயலுமா என்று கேட்டிருந்தேன். உடனே செய்தார். அவருக்கு நன்றி.
Labels:
S.Sampath,
இடைவெளி,
எஸ்.சம்பத்,
பரிந்துரை
Thursday, August 18, 2011
தீராக்காதலி - டெலிபோன் டைரக்டரி
தீராக்காதலி
"இது போலெல்லாம் ஒரு புத்தகம் வருமா, என்ன தவம் செய்தோனோ இதைப் படிக்க", என்றெல்லாம் ஒரு ரசிகர் கண்ணீர் மல்கி நெக்குருகி சாருவின் வலைத்தளத்தில் எழுதி இருந்தார். போதாக்குறைக்கு, 'காப்பியத் துயரத்தை சாரு வாசகர்களின் இதயத்தில் பரவச் செய்கிறார்' என்றும் பின்னட்டையில் போட்டிருந்தது. ஏதோ விஷயம் இருக்கிறது என்றும், சாரு கட்டுரைகளை நன்றாக எழுதுவார் என்று நம்பியும் இந்தக் கட்டுரைத் தொகுப்பை வாங்கிப் படித்தேன்.
ஆசிரியர் : சாரு நிவேதிதா
பதிப்பகம்: உயிர்மை
விலை: ரூ 80
"இது போலெல்லாம் ஒரு புத்தகம் வருமா, என்ன தவம் செய்தோனோ இதைப் படிக்க", என்றெல்லாம் ஒரு ரசிகர் கண்ணீர் மல்கி நெக்குருகி சாருவின் வலைத்தளத்தில் எழுதி இருந்தார். போதாக்குறைக்கு, 'காப்பியத் துயரத்தை சாரு வாசகர்களின் இதயத்தில் பரவச் செய்கிறார்' என்றும் பின்னட்டையில் போட்டிருந்தது. ஏதோ விஷயம் இருக்கிறது என்றும், சாரு கட்டுரைகளை நன்றாக எழுதுவார் என்று நம்பியும் இந்தக் கட்டுரைத் தொகுப்பை வாங்கிப் படித்தேன்.
Labels:
charu,
theeraakkaadhali,
சாரு நிவேதிதா,
தீராக்காதலி
Monday, June 20, 2011
பண்டைய இந்தியாவில் புரட்சியும், எதிர்ப்புரட்சியும் : அம்பேத்கர் - பாகம் 1

பண்டைய இந்தியாவில் புரட்சியும், எதிர்ப்புரட்சியும்
ஆசிரியர்: பாபாசாகேப் அம்பேத்கர் - பாகம் 1
பரிந்துரை: சண்முகம்ஆசிரியர்: பாபாசாகேப் அம்பேத்கர் - பாகம் 1
ஆரியர்களின் வரவு - ஆரிய சமூகம் - யாகபலிகள் - புத்தர் வருகை - மனுஸ்மிருதி - சதுர்வர்ண முறை - சாதிச்சமூகம் - சாதியும் தேசமும் - இந்தியாவில் விஞ்ஞானம் - படிப்படியான சமத்துவமின்மை - பௌத்தத்தின் வீழ்ச்சியும் நலிவும் - இந்து சமய இலக்கியங்கள் - பகவத்கீதை - பெண்களின் நிலை
அம்பேத்கர் பல கால கட்டங்களில் எழுதிய கட்டுரைகளின் தொகை நூல் இது. இந்திய அரசியல் சாசனத்தை வடித்தவராகிய அம்பேத்கர் ஒரு வரலாற்று ஆய்வாளரும் கூட. பண்டைய இந்தியா குறித்த அவரது ஆய்வுகளும் கருத்துக்களும் இந்திய சமூக வரலாற்றைத தெரிந்து கொள்ள விரும்பும் எவருக்கும் இன்றியமையாதது.
Labels:
பாபாசாகேப் அம்பேத்கர்

