Showing posts with label கடல்புரத்தில். Show all posts
Showing posts with label கடல்புரத்தில். Show all posts

Wednesday, June 23, 2010

கடல்புரத்தில் - மாற்றத்தின் ஓயா அலைகள்

கடல்புரத்தில்  
ஆசிரியர்: வண்ணநிலவன்
பதிப்பகம்: கிழக்கு
பரிந்துரை: கரிகாலன்


பல நூற்றாண்டு காலங்களாக வல்லத்தில் (படகில்) ஏறி, கடலில் மீன் பிடித்து வாழ்ந்த  மணப்பாட்டு கிராமத்து மக்களின் வாழ்க்கையைப் பற்றிய நாவல். நாவலின் முக்கிய கதா பாத்திரங்கள் பிலோமிக் குட்டியும், அவள் குடும்பமும்.  பிலோமிக் குட்டியின் அப்பச்சி குருஸ், அண்ணன் செபஸ்தி, அம்மை மரியா, அவர்களது வாழ்க்கையை ஒட்டி எளிய கதையாக தோன்றும் இந்த நாவல் பல தளங்களில் மனத்தைக் கவரும் நாவல்.



ஒரு சிறு குடும்பப் பிரச்னையில் ஆரம்பிக்கறது நாவல்.  வாத்தியார் வேலைக்குப் படித்து பக்கத்து ஊரில் வேலை செய்யும் செபஸ்திக்கு ஒரு தொழில் தொடங்க முதலீடு தேவை.  அதற்காக அப்பச்சி குரூசிடம், வல்லத்தையும் வீட்டையும் விற்று விட்டுத் தன்னுடன் வரச் சொல்லி அடிபோடுகிறான்.  வர மறுக்கும் அப்பச்சியிடம் செபஸ்தி, கோபத்துடன் கேட்கிறான்,    "அப்பம், நீர் என்னை ஏன் படிக்க வச்சீர்?  ஒம்மப் போல மீன் பிடிக்க வல்லம் கட்டிக் கொண்டு கடலுக்கு போயிருப்பேனே.  ஏன் நீரு என்னையப் படிக்க வச்சிரு...",