Showing posts with label கானல் வரி தமிழ்நதி. Show all posts
Showing posts with label கானல் வரி தமிழ்நதி. Show all posts

Thursday, August 5, 2010

கானல் வரி - தமிழ்நதி


கானல் வரி
ஆசிரியர்: தமிழ்நதி
பதிப்பகம்: உயிர்மை
பரிந்துரை: சண்முகம்



தமிழ்நதியை நான் "ஈழவிடுதலையின் தோல்வியில் இணைந்த சாருவும் ஜெயமோகனும்" என்னும் காத்திரமான கட்டுரையினூடாகத் தான் அறிந்துகொண்டேன். இந்தக் கட்டுரையின் பின்புலத்தில் உள்ள தார்மிகச் சீற்றமும் நியாயமும் என்னை வெகுவாக கவர்ந்தன.

என் வரையில், சீரிய இலக்கியம் படைக்கும் பெண் எழுத்தாளர் வரிசையில் அம்பையை மட்டுமே நான் அறிந்திருந்தேன். சீரிய பெண் எழுத்தாளர்கள் அருகிப் போன நம் சமூகத்தில், பெண்ணின் மனவோட்டத்தை பெரும்பாலும் ஆண்களே பதிவு செய்யும் இந்த அவல நிலையில், 'கானல் வரி' யின் வாயிலாக, ஒரு பெண்ணின் உலகை, அவள் காணும் உலகை தரிசிக்க ஆவலாய் நுழைந்தேன்.