குழந்தைகள் கற்கும் விதம்
Lifelong Books, De Capo Press
USD 16.00
ஆசிரியர்: ஜான் ஹோல்ட்
உங்களால் குழந்தைளின் கல்வியைப் பற்றி ஒரே ஒரு புத்தகத்தைத் தான் படிக்க முடியுமென்று இருக்குமேயானால், ஆசிரியர் ஜான் ஹோல்ட் எழுதிய இந்தப் புத்தகத்தைப் படியுங்கள். 1967ல் எழுதப்பட்ட இந்தப் புத்தகம், இன்றும் குழந்தைகள் எப்படிக் கற்கிறார்கள் என்று அறிந்து கொள்ள முயலும் அனைவருக்கும் பரிந்துரைக்கப் படும் புத்தகங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. நவீன யுகத்தில் குழந்தைகள் கற்கும் விதம் பற்றிய (ஐந்து வயதிற்கும் கீழே உள்ள குழந்தைகளுக்கான கல்வி), ஒரு கூர்மையான பார்வையை முன் வைத்தவர் ஜான் ஹோல்ட்.