Showing posts with label மரப்பாச்சி. Show all posts
Showing posts with label மரப்பாச்சி. Show all posts

Friday, December 13, 2013

தொலை கடல்

தொலை கடல்
தமிழினி பதிப்பகம்
உமா மகேஸ்வரி
சிறுகதைத் தொகுப்பு
விலை: ரூ 50/-


பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்தவனாக இருந்தாலும் ஒரு முன்பின் தெரியாத ஆண்மகனுடன் முதலிரவைக் கழிக்கும் பெண்ணின் தடுமாற்றம், தாம்பத்ய உறவில் கணவன் செய்யும் துரோகத்தை அறியும் மனைவி கொள்ளும் துயரம், சகோதரிகளுக்குள் உள்ள போராட்டம், சொந்த மகன் இறந்ததால் தாலியறுக்கும் மருமகளைக் கண்டு மாமியார் தன்னை அறியாமலே கொள்ளும் மகிழ்ச்சி என, சுவாரசியமான கதைக்களங்கள் நிறைந்த சிறுகதைத் தொகுப்பு.  

Monday, March 1, 2010

மரப்பாச்சி

மரப்பாச்சி
எழுத்தாளர்: உமா மகேஸ்வரி
பதிப்பகம்: தமிழினி

ஓர் அழகிய இளம்பெண், தலை நிலம் நோக்கி, ஆழ்ந்த அகத்தாய்வு செய்வதைப் போன்ற அழகான சித்திரம் அந்தப்  புத்தகத்தின் அட்டையில் இருப்பதைப் பார்த்து அதை வாங்கினேன். இதில் இருந்தே நான் புத்தகம் தேர்வு செய்யும் 'அளகை '  நீங்கள் உணர்ந்து கொள்ளலாம்!  உமா மகேஸ்வரியின் பெயரை இதற்கு முன் எங்கும் கேள்விப்படாததால், அவரது சிறு கதைத் தொகுப்பான 'மரப்பாச்சி' என்ற அந்தப் புத்தகம் பல நாட்களாக என் அலமாரியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.  இரண்டு நாட்களுக்கு முன், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் random ஆக  "மரப்பாச்சி"யை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.  படித்து முடித்ததும் அசந்து போய் விட்டேன்!