பாலகாண்டம்
ஆசிரியர்: இலட்சுமணப்பெருமாள்
பரிந்துரை: சண்முகம்
பரிந்துரை: சண்முகம்
பதிப்பகம்: தமிழினி
பக்கங்கள்: 160
"என்னமாப் படம் பிடிக்கிறார் விசயங்களை" என்று கி. ராசநாரயணனே வியக்கும் எழுத்தாளர் இலட்சுமணப் பெருமாள்.
இவரது சிறுவயதிலே, இவருடைய முதிலித்தாய், காதில் வண்டிக்கம்மல் ஆட ஆட கதை கதையாய்ச் சொல்லி வளர்த்திருக்கிறாள். அதற்கு பின்னர் என்ன என்ன வேலையெல்லாம் செய்து வளர்ந்திருக்கிறார் பாருங்கள்: கூலி விவசாயம், மைக்செட் தொழிலாளி, பால் பண்ணையில வேல, நிப்புக் கம்பெனி தொழிலாளி, பஸ்ல கண்டக்டர், லாரியில கிளீனர், மேடையில வில்லிசைக் கச்சேரி, தீப்பெட்டி உற்பத்தியாளி, பெட்டிக்கடை வியாபாரி...