எட்டுத்திக்கும் மதயானை
எழுத்தாளர்: நாஞ்சில் நாடன்
பதிப்பகம்: விஜயா பதிப்பகம்
தமிழின் சிறந்த பத்து புதினங்களில் ஒன்றெனப் பல வருடங்களுக்கு முன் எங்கோ
படித்த உடனே இந்த நூலை வாங்கியவன், பல வருடங்கள் கழித்தே தற்போது தான்
வாசித்து முடித்தேன். என்ன தான் இலக்கியம் படித்தாலும், தலைப்பை வைத்து,
நாவலின் முடிவில் எட்டுத் திக்கும் மதயானை முற்றுகையிடுவது போன்ற
சூழ்நிலையில் கதை நாயகன் உழலுவதைக் குறிப்பதாக்கும் என யூகம் செய்து, முன்
கூட்டியே முடிவை நிர்ணயித்து, சிறிது அசுவராஸ்யமாகவே தான் ஆரம்பித்தேன்.
ஒரு நாவல் எப்படி முடிகிறது என்பது நாவலின் உன்னதத்தைப் பெரும்பங்கு
தீர்மானிக்கிறதா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது.