பண்டைய இந்தியா : பண்பாடும் நாகரிகமும்: தொகுப்பு
ஆசிரியர்: டி.டி.கோசாம்பி
பதிப்பகம்: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
தமிழாக்கம்: ஆர். எஸ். நாராயணன் (எஸ்.ஆர்.என். சத்யா)
பரிந்துரை: சண்முகம் / கரிகாலன்
டி. டி. கோசாம்பியின் 800 பக்கங்களே கொண்ட ௦௦புத்தகமான பண்டைய இந்தியாவைப் பற்றி எழுத ஆரம்பித்த போது அது இவ்வளவு நீளமாக வரும் என்று நாங்கள் இருவரும் நினைக்கவில்லை. இந்தப் புத்தகத்தின் நடை கொஞ்சம் கடினமாக இருந்தாலும், கொஞ்சம் ஊன்றிப் படிக்க ஆரம்பித்ததில், கோசாம்பி இந்திய வரலாற்றை அணுகிய விதம் நாங்கள் இதுவரை படித்த இந்திய வரலாற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்டது என்று புலப்பட்டது. அதனால், இந்தப் புத்தகத்தில் கோசாம்பி கூறியவற்றை முடிந்த அளவிற்கு தொகுத்து எழுத வேண்டும் என்ற எண்ணம் எங்கள் இருவருக்கும் வந்தது. அதன் விளைவே இந்த நீண்ட தொடர். உண்மையில் சொல்லப் போனால், இதை எழுதியதில் முக்கிய பலன் எங்கள் இருவருக்கும் தான் என்று சொன்னால் மிகையில்லை.