ஞானமடைதல் என்ற புதிர்
யு ஜி கிருஷ்ணமூர்த்தி
கண்ணதாசன் பதிப்பகம்
விலை: 80 ரூபாய்
யு ஜி கிருஷ்ணமூர்த்தி
கண்ணதாசன் பதிப்பகம்
விலை: 80 ரூபாய்
இருபதாம் நூற்றாண்டில், இந்தியாவிலிருந்து தோன்றிய மகத்தான தத்துவ ஞானிகளுள் ஜே கிருஷ்ணமூர்த்தியும் (ஜேகே), யு ஜி கிருஷ்ணமூர்த்தியும் (யுஜி) அடக்கம். ஜேகே உலகப்பிரசத்தியானவர்; யுஜியை அறிந்தவர்கள் சிலரே. பெயரை மீறி, இருவருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு. இருவரும் சமகாலத்தவர்கள். தங்கள் தத்துவ விளக்கங்களில் மரபை உடைத்தெறிந்தவர்கள். ‘உலகை மீட்க வந்த மீட்பர்’ எனத் தத்துவ உலகம் ஜேகே-யை கொண்டாடிய போது, ‘முதலில் இந்த உலகை மீட்பர்களிடமிருந்து (ஜேகே உள்பட) மீட்க வேண்டும்’ என்று சொன்னவர் யுஜி.