வெட்டுப்புலி
தமிழ்மகன்
பக்கங்கள் 375
உயிர்மை பதிப்பகம்
விலை: ரூ 220
பரிந்துரை: சண்முகம்/ராஜா
1960 களில் ஆட்சியைக் கைப்பற்றிய திராவிட கட்சிகள் இன்று வரை தமிழக அரசியலில் பெரும் பங்கை வகித்து வருகின்றன. 20 ஆம் நூற்றாண்டின் தமிழக அரசியலைப் பற்றிப் பேசினால், "பெரியார் பிராமண துவேஷத்தைப் பற்றி மட்டும் பேசினார்", "பெரியாரை இகழ்வதா", "ராஜாஜி மட்டும் இருந்திருந்தால்..", "இந்த திராவிடக் கட்சிகள் மட்டும் இல்லாதிருந்தால்...", என்ற ஒற்றைப்படையான டீக்கடைப் பெஞ்சு விவாதங்கள் மட்டுமே எஞ்சுகின்றன . முதல் பார்வையில் சமநிலையுடன் எழுதப்பட்டதாகத் தோன்றும் அலங்காரமான எழுத்துக்கள் கூட, உற்று நோக்கும் போது இத்தகைய ஒற்றைப்படையான கருத்துக்களையே முன்வைப்பதைப் பார்க்கலாம். வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட நாவல்களை எழுதுவது, அதுவும் அண்மைக்கால/சமகால அரசியல் வரலாற்றை எழுதுவது, சிரமமான காரியம்.