'புயலிலே ஒரு தோணி' மற்றும் 'கடலுக்கு அப்பால்' என்ற இரு நூல்களை மட்டும் எழுதிய திரு ப. சிங்காரம், ஒவ்வொரு நூலையும் எழுதி, அதைப் பதிப்பிக்கப் பத்து ஆண்டுகள் அலைந்திருக்கிறார். ஒரு கசப்பான வாழ்க்கையைத் தனிமையில் வாழ்ந்து மறைந்திருக்கிறார். திரு சிங்காரம் பற்றிய மேலதிக விபரம், இவ்விரு நூல்களின் 'தமிழினி' செம்பதிப்பின் முகவுரையில் அவரிடம் திரு முருகேச பாண்டியன் எடுத்த பேட்டியில் உள்ளது. 1950 -களில், சாண்டில்யன் வகை, மற்றும் தட்டையான எழுத்தைப் படித்துப் பழகியிருந்தவர்களுக்கு சிங்காரத்தின் நடை புரியாமல், பிடிக்காமல் போனதில் வியப்பு இல்லை. அனாவசியத்துக்கு ஒரு கால் புள்ளியைக் கூட விரயமாக்காமல், உயரிய அங்கதச் சுவையும் கதை வீச்சும் கொண்டுள்ளது இந்தநூல்.
Sunday, January 31, 2010
Tuesday, January 26, 2010
பிற தளங்களிலிருந்து..
இந்தப் பதிவில், பிற தளங்களிலிருந்து, பதிவர்கள் அனுமதியுடன் நூல் மதிப்புரைகளின் இணைப்புகள் கொடுக்கப்படும்.
1. சாருவின் "மலாவி என்றொரு தேசம்" நூலுக்கு, 'வள்ளியூர் ஞான பாஸ்கர்' அவர்கள் அளித்திருக்கும் மதிப்புரையைக் கீழ்காணும் சுட்டியில் காணலாம்.
மலாவி என்றொரு தேசம
2 . வண்ண நிலவன் அவர்களின் 'ரெயினீஸ் ஐயர் தெரு' நூல் அறிமுகத்தை ஜெ.ஜெ. அவர்கள் மிகவும் அழகாக அளித்துள்ளார். அதனைக் கீழ்காணும் சுட்டியில் காணலாம்
ரெயினீஸ் ஐயர் தெரு காணலாம்.

Labels:
book review,
charu,
malavi
Monday, January 25, 2010
காவல் கோட்டம் - சுவாரஸ்யமான மதிப்புரைகள்
இது விமர்சனம் இல்லை. விமர்சனகளின் தொகுப்பு.
நான் புதிதாக ஒரு புத்தகம் படிக்க நினைத்தால் படிப்பதற்கு முன் நெருங்கிய நண்பர்களிடமோ அல்லது நல்ல ஒரு மதிப்புரையையோ படித்த பின்தான் படிக்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்வேன். சமீபத்தில் வெளி வந்த காவல் கோட்டம் ஆயிரம் பக்கத்திற்கும் மேலான நீண்ட புத்தகம். புத்தகத்தை எழுதியவர் சு. வெங்கடேசன். இளம் வயதுக் காரர், அவரது முதல் புத்தகம். கள்ளர்கள் வாழ்க்கையைச் சித்தரிக்கும் பெரும் நாவல் என்று மட்டும் மேலோட்டமாகத் தெரிந்திருந்தது.
தமிழில் தரமான இலக்கியம் படைக்கும் எழுத்தாளர்கள் எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் இருவரும் காவல் கோட்டத்திற்கு, முகப்புரை எழுதியிருந்தார்கள். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், எஸ். ராமகிருஷ்ணன் இந்தப் புத்தகத்தை, ஆயிரம் பக்க அபத்தம் என்று ஒரே காய்ச்சு, காய்ச்சு விட்டார். எஸ்.ரா தன் முகப்புரையில் இந்தப் புத்தகத்தைப் கொஞ்சம் காட்டமாகவே எழுதியிருந்தார். எஸ்.ரா எழுதியது அவர் இயல்புக்கு மாறாக இருந்தது என்று எஸ். ராவின் எழுத்துக்களை ஆர்வமுடன் படிக்கும் என் நண்பர் ஒருவர் கூடக் கூறினார்) எஸ். ராவின் விமரிசனத்தை மறுத்து கீற்று பத்திரிக்கையில் திரு. மணிமாறன் அதே காட்டத்துடன் எழுத்து வியாபாரியின் அபத்த அரசியல் என்று எதிர்வினை எழுதி இருந்தார். அட, இந்தப் புத்தக விமரிசனம் இவ்வளவு காட்டமாக இருக்கிறதே விமரிசகர்கள் மத்தியில் - என்று நினைத்தேன்.
அப்புறம் ஜெயமோகனின் விமரிசனம் வந்தது. காவல் கோட்டத்தைச் சிலாகித்து விரிவாக விமரிசனம் ( ஐந்து பாகங்கள்) செய்திருந்தார். தனக்கே உரித்தான முறையில் காவல் கோட்டத்தின் பல படிமங்களை முன் வைத்தார். அதைப் படித்தபின் அவசியம் காவல் கோட்டத்தை வாங்கிப் படிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். சமீபத்தில் இந்தியா சென்ற நண்பர் ஒருவரை வாங்கி வரச் சொல்லி இருக்கிறேன். படித்தவுடன் என் எண்ணங்களை எழுதுகிறேன்.
காவல் கோட்டத்தை படித்தவர்கள் என்ன நினைகிறீர்கள்?
குறிப்பு 1 :
புத்தக விவரம்:
காவல் கோட்டம்
சு. வெங்கடேசன், தமிழினி பதிப்பகம்
குறிப்பு 2:
காவல் கோட்டத்தை எழுதிய சு. வெங்கடேசன், ஒரு காலத்தில் ஜெயமோகனின் விஷ்ணுபுரத்தை கிழி, கிழி என்று கிழித்து எழுதியது பலருக்கு நினைவிருக்கலாம். பிறர் தன்னைப் பற்றிக் கூறும் சிறு குறைகளைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாத மெல்லிய தோல் கொண்டவர்களாக பல எழுத்தாளர்கள் இருக்கும் காலத்தில், ஜெயமோகன் போன்ற பாரபட்சமற்ற விமரிசகர்கள் இருப்பது மிகவும் பாராட்டத்தக்கதே!

kaaval kottam,
காவல் கோட்டம்
Monday, January 11, 2010
விஷ்ணுபுரம் - ஒரு விஸ்வரூபம்
அசுர வேகத்தில் எழுதும் ஜெயமோகனின் நூல்களில் ஏழாம் உலகத்திற்கு அடுத்து அதிகளவு விமர்சனத்துக்குள்ளான புத்தகம் இதுதான் என்று நினைக்கிறேன். ஏற்கனவே கல்கி போன்றவர்களின் தலையணை சைஸ் புத்தகங்களைப் படித்திருகிறேன். அனால், விஷ்ணுபுரத்தில், கலைச்சொற்கள் மிகுதி, கடின நடை, போன்ற விமர்சனங்களே மிகுதியாக இருந்ததால், இதனுள் கொஞ்சம் தயங்கித்தான் நுழைய நேர்ந்தது. பின்னர், படித்து முடித்ததும், Lord of the Rings - மற்றும் Matrix Trilogy பார்த்தது போலிருந்தது.
நிறைய விமர்சகர்கள், இது ஒரு இந்துத்துவா நாவல் என்று வைக்கும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. மாறாக இது, இந்து மத ஆச்சார்யர்களை,

jeyamohan,
vishnupuram,
விஷ்ணுபுரம்,
ஜெயமோகன்