
சாப்பாட்டுப் புராணம்
ஆசிரியர்: சமஸ்
பதிப்பகம்: தான் பிரசுரம்
பரிந்துரை: சண்முகம்
இந்த சாப்பாட்டைப் பற்றிய புராணமெல்லாம் இலக்கியமாகுமா ? இதற்கெல்லாம் ஒரு பரிந்துரையா ? இந்த கேள்வி எனக்கும் இருந்தது. இந்த கேள்வியை முன் கூட்டியே உணர்ந்தார்போல், இந்நூலின் முகப்புரையில் பதிலுரைக்கிறார் சமஸ்:
"... இரண்டு ஊர்க்காரர்கள் சந்தித்துக்கொண்டால், ஊரைப்பற்றி, உணவைப்பற்றி மனதார, வாயார பேசிப் பூரிப்படைகிறோம். ஆனால் எழுத்து என்று வரும்போது அதன் முக்கியத்துவத்தை நிராகரித்து விடுகிறோம். உணவைப்பற்றி எழுதுவது இலக்கியமாகாது என்கிற தாழ்வான அபிப்பிராயம் நம்மிடத்தில் படிந்திருக்கிறது.... "