மாதொருபாகன் - 1 இன் தொடர்ச்சி...
மாதொருபாகனின் இன்னொரு குறிப்பிடத் தக்க அம்சம் அந்த கால கட்டத்து குடியானவனின் வாழ்க்கையை ஆவணப் படுத்துவது. குடியானக் கவுண்டனும், கள்ளிறக்கும் சாணானும், காட்டில் வேலை செய்யும் சக்கிலியும் ஒரே காற்றைச் சுவாசித்து வாழ்ந்தாலும், அவர்களுக்கிடையே இருக்கும் சமுதாய வேறுபாடுகளை பெருமாள் முருகன் மிகையின்றிச் சித்தரித்திருக்கிறார். குடியானவனின் வாழ்க்கையில் சொத்தும், வாரிசும் முக்கியப் பங்கை வகிக்கின்றன.