Friday, August 9, 2013

இன்றிரவு நிலவின் கீழ்

இன்றிரவு நிலவின் கீழ்
100 நவீன ஹைக்கூ கவிஞர்கள்
தமிழாக்கம்: ஆர்.  அபிலாஷ்
வகை: கவிதை மொழிபெயர்ப்பு
பதிப்பகம்: உயிர்மை
விலை: ரூ 75/-


இந்த கவிதை மொழிபெயர்ப்பில் உலகப் புகழ் பெற்ற ஹைக்கூ கவிஞர்களை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார் ஆசிரியர். அபிலாஷ்.  

Friday, July 19, 2013

வாடிவாசல்

வாடிவாசல்

சி.சு. செல்லப்பா
வகை: குறுநாவல்
பதிப்பகம்: காலச்சுவடு
பரிந்துரை: கரிகாலன்/சண்முகம்

(குறிப்பு: இந்த அட்டைப் படத்தை எடுத்ததும் சி. சு. செல்லப்பா தான்)




நான் இதுவரை ஜல்லிக்கட்டை நேரடியாகப் பார்த்ததும்  இல்லை, அது பற்றி குறிப்பிடத்தக்க  அபிப்ராயங்களும் இருந்ததில்லை.  தொலைக்காட்சியில் ஜல்லிக்கட்டைப் பற்றிய காணொளிகளின்  வழியாக நான் அடைந்த மனச் சித்திரம் - காளைகள் மிரண்டு ஓடுவதும், ஆட்கள்அங்குமிங்கும் கும்பலாக துரத்திக் கொண்டு போவதும் தான் - வாடிவாசல் புத்தகம் படிக்கும் வரை.

Friday, July 12, 2013

தேவதேவன் கதைகள்

தேவதேவன் கதைகள்

தமிழினி பதிப்பகம்
சிறுகதைத் தொகுப்பு
விலை: ரூ 50/-






சில சமயங்களில், பழைய புகைப்படத் தொகுப்பை புரட்டி பார்க்கும் போது மனதில் பல ஆண்டுகளாக நினைவு கூறாத எண்ணங்கள் சட்டென்று ஒரே கணத்தில் உங்களை வியாபித்து விடும்.  அந்த ஒரு கணத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் தான் உணர்ந்தவாறே மீட்டெடுத்து சொல்லும் சக்தி வாய்ந்த கதை சொல்லி தேவதேவன். 


Monday, July 1, 2013

சூரியன் தகித்த நிறம்

சூரியன் தகித்த நிறம்
வகை: கவிதைகள்
ஆசிரியர்: பிரமிள்
பதிப்பகம்: நற்றிணை
விலை: 70 ரூபாய்



கவிதைகள்  வாசிக்கும் பழக்கம் இல்லாதவன் நான்.  தற்செயலாக கவிஞர் பிரமிளின், "சூரியன் தகித்த நிறம்', கவிதை மொழிபெயர்ப்புத்  தொகுப்பை எடுத்து வாசிக்க ஆரம்பித்த எனக்குக் கிட்டியது திகைப்பூட்டும் இனிய விருந்து. 


Friday, June 21, 2013

ஆளுக்கொரு கிணறு

ஆளுக்கொரு கிணறு

(மொழி... பண்பாடு... கல்வி குறித்த கட்டுரைகள் )
ஆசிரியர்: ச. மாடசாமி
பதிப்பகம்: அருவி மாலை பதிப்பகம்
aruvi.ml@gmail.com

பரிந்துரை: கரிகாலன், சண்முகம்





எல்லாக் குழந்தைகளின் ஆரம்ப நிலைக் கல்வியைப் பற்றிய முடிவுகளைப் பெற்றோர்களே எடுக்கின்றனர்.  பெற்றோர்கள் எதை நல்ல கல்வி முறை என்று கருதுகிறார்கள்? உதாரணமாக கீழ்க்கண்ட வாக்கியங்களை உங்கள் நண்பர் உங்களிடம் சொன்னால் அவற்றைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்?


1) எந்தப் பள்ளியில் அதிக நேரம் செலவழித்து, அதிகமான பாடங்களைச் சொல்லித் தருகிறார்களோ அதுவே நல்ல பள்ளி.
(இவங்க ஸ்கூலிலே ஒரு நாளைக்கு மூணு மணி நேரம் ஹோம் வொர்க் செய்யணும்).

2) எந்தப் பள்ளி பாடத் திட்டத்தில் கடினமான பாடங்கள் இருக்கிறதோ, அந்தப் பாடத் திட்டமே தரமானது. 
(இவங்க ஸ்கூலிலே இதை நாலாங் கிளாசிலேயே கவர் பண்ணி விட்டார்கள்).

3) எந்த வகுப்பறையில் மாணவர்கள் அமைதியாக உட்கார்ந்து, சப்தமின்றி ஆசிரியர் சொல்லுவதை கேட்கிறார்களோ, அதுவே நல்ல வகுப்பறை.
(இவங்க ஸ்கூலிலே பெல் அடிச்சா போதும்.  ஸ்கூலே கப்-சிப் என்று இருக்கும்).

4) எந்த ஆசிரியர் தேர்வுக்குத் தேவையான எல்லாப் பாடத்தையும்  பல முறை சொல்லித் தருகிறாரோ அவரே நல்ல ஆசிரியர். 
(இவங்க வாத்தியார் இந்த ஸிலபசை ஒரு வருடத்தில் நான்கு முறையாவது கவர் செய்து விடுவார், தெரியுமா?).

பெரும்பாலான, மத்திய வர்க்க குடும்பப் பார்வையில், மேலே சொல்லப்பட்டஅனைத்தும் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு நல்ல கல்வியை அளிக்க உதவும் முறை என்று தானே நினைப்பீர்கள்?