பரிந்துரை: விருட்சம்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம் ,
7 , இளங்கோ சாலை, சென்னை - 18
( 044 - 24339024 / 24332924 / 24332424 )
சமீபத்தில் மனதை பாதித்த இந்த சிறுகதை, ஆயிஷா
தமிழில் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆன குறுநாவல் எனப் போற்றப்படும் ஒரே படைப்பு, குறும்படமாகவும், படைக்கதையாகவும், வீதி நாடகமாகவும் பல பிறவிகள் எடுத்த கதை. கணையாழி குறுநாவல் போட்டியில் 1996ல் முதல் பரிசு பெற்ற குறுநாவல் தான் இது.
பள்ளிக்கூடங்கள், பலிக்கூடங்கள் ஆகிவிட்டன அல்லவா... இந்த யதார்த்தத்தை போட்டுஉடைத்து தமிழ் சூழலில் மட்டுமின்றி (8 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு) உலகெங்கும் கல்வி ஆர்வலர்களின் மனசாட்சியை புரட்டிப்போட்ட ஒரு இயக்கம் இந்த படைப்பு.
இன்றும் லட்சக்கானவர்களை கல்வி குறித்த விமர்சனப் பார்வைக்குள் இழுக்கும் சக்திவாய்ந்த படைப்பு, இரா. நடராசனை, 'ஆயிஷா நடராசன்' என்றே அறிய வைத்த கதை. கீழ்கண்ட சுட்டியிலுருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழ்: http://www.eranatarasan.com/
ஆங்கிலம்: http://www.eranatarasan.com/
9 comments:
பரிந்துரைக்கு நன்றி விருட்சம்.
நான் நீங்கள் சொன்ன தளத்திலிருந்து தரவிறக்கம் செய்துகொண்டேன். இன்னும் படிக்கவில்லை.
குறுநாவல் என்று சொல்ல முடியுமா தெரியலை. ஒரு பத்து பக்கத்துக்குள் தான் வருகிறது.
ஆசிரியர்கள் பெற்றோர்கள் ஒவ்வொருவரும் ஒரு முறையேனும் படிக்க வேண்டிய புத்தகம்.
இப்போதைய கல்வி முறை மட்டும் ஆசிரியர்கள் , பெற்றோர்கள் அணுகுமுறை மீது எனக்கு ஏகப்பட்ட விமர்சனங்கள் உண்டு. அதை முன் வைக்கும் கதை இது
அயீஷா, இந்த கல்வி அமைப்பின் பரிசோதனைத் தவளை ,
http://www.virutcham.com/?p=3556
திடீர்னு ஞாபகம் வந்து எழுதியது
நான் இந்த குறு நாவலை வாசித்தபோது ஏதோ உண்மைச் சம்பவம் போலவே தோன்றியது.
மலர் அல்ஜீப்ரா நாவலையும் வாசியுங்கள், பிள்ளைகளுக்காக பெற்றோர் வாசிக்கவேண்டிய நாவல்.
ஹரிஹரன்
மனதைத் தொட்ட சிறுகதை. பரிந்துரைக்கு நன்றி.
கேள்விகள் கேட்கப்படுவதை சகித்து கொள்ள முடியாத ஆசிரியர்கள் தான் நம் ஊரில் நிரம்பி உள்ளார்கள். ஆசிரியர்களும், பெற்றோர்களும் அவசியம் படிக்க வேண்டியது.
செய்திக்கதை போலவே இருந்தாலும், கதாசிரியர் கடைசியில் என்னவோ சினிமா போல முடித்திருக்கிறார்.
குருகுலத்தில் இருந்து வரும் 'பெரியவங்கக் கிட்டக் கேள்வி கேக்கக் கூடாது' என்ற இது ஒரு catch-22 சங்கடம். கேள்வி கேட்பதை ஊக்குவிக்கும் நல்ல ஆசிரியர்களிடமும் நான் படித்திருக்கிறேன். சில மாணவர்கள், 'வாத்தியார விட எனக்கு நல்லாத் தெரியும்' என்று வகுப்புப் பாடம் மேலே செல்ல விடாமல் கேள்வி மேல் கேள்வி கேட்டுத் தடுப்பார்கள். பல ஆசிரியர்களுக்கு (குறிப்பாக ஆசிரியைகளுக்கு), மாணவர்கள் வாயைத் திறப்பதே அடங்காப்பிடாரித்தனம் என்ற கருத்து உண்டு. கோனார் நோட்ஸ் வாத்தியார்கள் இன்னும் கொடுமை. மனப்பாடம் செய்து அப்படியே வெளியேற்றும் கலைஞர்களாகவே மாணவர்களை மாற்றி விடுவார்கள். என்னைக் கேட்டால், பெற்றோர்கள்தான் தம் நேரத்தைப் பிள்ளைகளின் படிப்புக்காக ஒதுக்கி ஆக்கபூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும். ஆனால் அது என்ன என்பதுதான் எனக்குத் தெரியவில்லை.
Buy Tamil Books Online @ http://www.myangadi.com/
heart touched short story that i ever heard
Touching story
Post a Comment