உறுபசி
ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: உயிர்மை
விலை: ரூ. 75/-
பட உதவி: jungle cookie
ஒரு இளைஞன் ஒத்துதவி வாழாமல் இயற்கை நியதி, சமூக நியதியை விட்டு விலகி, தன உயிராற்றலை இழந்து மரணத்தை எட்டும் ஒரு சோகம் நிறைந்த கதை. சம்பத், நம் மனதில் துன்பத்தின் உருவாக நிலைத்து விடுகிறான். 'கசப்பின் கோப்பை' கை தவறிக் கவிழ்ந்து சம்பத் துன்பத்தையே அனுபவிப்பதை என் மனம் நம்ப மறுக்கிறது. ஒரு முறை கூட தன் நிராசை நிறைந்த வாழ்க்கையை மாற்றிக் கொண்டு உற்சாகமாக இருக்க முடியாமல் வீணானது சம்பத், அவன் மனைவி இருவரின் துர்பாக்கியம் தான். இருவரும், தனி வாழ்க்கை, குடும்ப நட்பு, சமூக வாழ்க்கை, தெய்வ நீதி, வாழ்க்கை நியமங்கள், முதலிய எதிலும் ஒத்துப் போகாமல், படிப்பு, வேலை இல்லாமல், குறைந்த அளவிலாவது மனித நேயம் இல்லாமல் எப்படி மகிழ்ச்சியாக வாழ முடியும்? கர்ம வினைகளையும், இயலாமைகளையும், வாழ்க்கையில் போராடி ஜெயிக்க ஒரு தூண்டுகோலாக நினைக்க வேண்டுமா?
நட்பும் வழித்துணையாக இருக்க வேண்டாமா? நண்பர்களால் அவன் வாழ்க்கையை சீரமைக்க முயர்ச்சித்திருக்கவே முடியாதா?
சம்பத், மரணத்தருவாயில் தன் தாய், தந்தைக்கு ஒன்றும் செய்ய முடியாததை, சாதாரண அன்பு, தொடர்பு கொள்ள முடியாத மனித நேயமற்று வாழ்ந்ததை ஆசிரியர் கோடி காட்டுகிறார். கதை சொல்லும் உத்தி மிக உன்னதமாக உள்ளது. இயற்கைச் சூழல் வர்ணனை நன்றாக உள்ளது.
சம்பத் காம உணர்வுகளால் அலைக்கழிக்கப் படுவதை ஒரு சமூக குறைபாடு போல் ஆசிரியர் குறிப்பிடுகிறார். படிப்பு, விவேகம், பண்பு, இறை உணர்வு, குற்றமிழைத்தால் தண்டனை செயலிலேயே அடங்கியுள்ள தெய்வநீதி, மிகச் சிறிய வயதிலேயே நமக்கு கற்பிக்கப்படுகிறது. வழிமுறைப்படுத்த முடியாத காட்டாறு போல், உயர்ந்த உணர்வுகள் மறந்த நிலையில் சம்பத் அழிவது மிகப் பெரிய இழப்பு.
திருமதி மீனா. நா. சுவாமி
திருமதி மீனா. நா. சுவாமி
1 comment:
Buy Tamil Books Online @ http://www.myangadi.com/
Post a Comment