வானம் வசப்படும்
(சாகித்ய அகாதமி பரிசு பெற்றது)
எழுத்தாளர்:
பிரபஞ்சன்
பதிப்பகம் : கவிதா பப்ளிஷர்ஸ்
பக்கங்கள்: 706
புதுச்சேரி பற்றிய வரலாற்று நாவலான 'மானுடம் வெல்லும்' என்ற நூலின் தொடர்ச்சியாக வந்தது
'வானம் வசப்படும்'. இதைத் தனி நாவலாகப் படிப்பதை விட, தேவையான
பின்புலங்கள் அடங்கிய முதல் நாவலின் தொடர்ச்சியாகப் படிப்பது உத்தமம்.
சிறந்த நூலுக்கான இந்திய அரசின் சாகித்ய அக்காதமி பரிசுடன், மாநில
அரசுகளின் பல்வேறு பரிசுகளையும்
Thursday, April 29, 2010
Friday, April 23, 2010
கதைக்கலாம் வாங்க...
புத்தகங்களைப் பரிந்துரை செய்யும் எங்கள் முயற்சியைப் பற்றி...
நாங்கள் மூவரும் இருபது வருடங்களுக்கு முன்பு கல்லூரியில் படித்த போது சந்தித்தோம். சில ஆண்டுகளுக்கு முன் காலத்தின் சுழற்ச்சியில்
நாங்கள் மூவரும் இருபது வருடங்களுக்கு முன்பு கல்லூரியில் படித்த போது சந்தித்தோம். சில ஆண்டுகளுக்கு முன் காலத்தின் சுழற்ச்சியில்
Friday, April 9, 2010
உறுபசி (1) : தீரா வலியின் ருசி
உறுபசி
ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: உயிர்மை
விலை: ரூ. 75/-
'நாற்பத்தி இரண்டே வயதில், கல்யாணமாகிய ஓரிரு வருடங்களிலேயே, அரசாங்க ஆசுபத்திரியில் இறந்து போகிறான் சம்பத்', என அதிர்ச்சியுடன் நாவல் ஆரம்பம் ஆகிறது. அவன் இறுதிக் காரியங்களை முடித்த கையுடன், அவனது நண்பர்கள் துரைசாமி, அழகர், மாரியப்பன், மற்றும் சம்பத்தின் மனைவி ஜெயந்தி ஆகியோரின் நினைவுகளின் வாயிலாக (flashback), சம்பத்தின் வாழ்க்கைப் பரிணாமத்தைக் கொஞ்சம், கொஞ்சமாக விவரித்துக் கொண்டே செல்கிறார் ஆசிரியர் எஸ்.ரா.
கதையின் முதல் தளம், புறவயமான நிகழ்வுகள். நால்வரும் கல்லூரியில் பெண்களே இல்லாத தமிழ்ப் பிரிவில், ஒன்றாகப் படித்தவர்கள்.
Labels:
book review,
S. ramakrishnan,
Urupasi,
உறுபசி,
எஸ். ராமகிருஷ்ணன்,
மதிப்புரை
உறுபசி (2) : மதிப்புரை: திருமதி. மீனா நா. சுவாமி
உறுபசி
ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்
பதிப்பகம்: உயிர்மை
விலை: ரூ. 75/-
பட உதவி: jungle cookie
ஒரு இளைஞன் ஒத்துதவி வாழாமல் இயற்கை நியதி, சமூக நியதியை விட்டு விலகி, தன உயிராற்றலை இழந்து மரணத்தை எட்டும் ஒரு சோகம் நிறைந்த கதை. சம்பத், நம் மனதில் துன்பத்தின் உருவாக நிலைத்து விடுகிறான். 'கசப்பின் கோப்பை' கை தவறிக் கவிழ்ந்து சம்பத் துன்பத்தையே அனுபவிப்பதை என் மனம் நம்ப மறுக்கிறது.
Labels:
book review,
S. ramakrishnan,
Urupasi,
உறுபசி,
எஸ். ராமகிருஷ்ணன்,
மதிப்புரை
Friday, April 2, 2010
எட்டுத்திக்கும் மதயானை
எட்டுத்திக்கும் மதயானை
எழுத்தாளர்: நாஞ்சில் நாடன் பதிப்பகம்: விஜயா பதிப்பகம்
தமிழின் சிறந்த பத்து புதினங்களில் ஒன்றெனப் பல வருடங்களுக்கு முன் எங்கோ படித்த உடனே இந்த நூலை வாங்கியவன், பல வருடங்கள் கழித்தே தற்போது தான் வாசித்து முடித்தேன். என்ன தான் இலக்கியம் படித்தாலும், தலைப்பை வைத்து, நாவலின் முடிவில் எட்டுத் திக்கும் மதயானை முற்றுகையிடுவது போன்ற சூழ்நிலையில் கதை நாயகன் உழலுவதைக் குறிப்பதாக்கும் என யூகம் செய்து, முன் கூட்டியே முடிவை நிர்ணயித்து, சிறிது அசுவராஸ்யமாகவே தான் ஆரம்பித்தேன். ஒரு நாவல் எப்படி முடிகிறது என்பது நாவலின் உன்னதத்தைப் பெரும்பங்கு தீர்மானிக்கிறதா என்ற கேள்வி எனக்குள் எழுகிறது.