Friday, December 13, 2013

தொலை கடல்

தொலை கடல்
தமிழினி பதிப்பகம்
உமா மகேஸ்வரி
சிறுகதைத் தொகுப்பு
விலை: ரூ 50/-


பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்தவனாக இருந்தாலும் ஒரு முன்பின் தெரியாத ஆண்மகனுடன் முதலிரவைக் கழிக்கும் பெண்ணின் தடுமாற்றம், தாம்பத்ய உறவில் கணவன் செய்யும் துரோகத்தை அறியும் மனைவி கொள்ளும் துயரம், சகோதரிகளுக்குள் உள்ள போராட்டம், சொந்த மகன் இறந்ததால் தாலியறுக்கும் மருமகளைக் கண்டு மாமியார் தன்னை அறியாமலே கொள்ளும் மகிழ்ச்சி என, சுவாரசியமான கதைக்களங்கள் நிறைந்த சிறுகதைத் தொகுப்பு.  

Wednesday, December 11, 2013

சுப்ரமணிய பாரதியார்

மகாகவியின் பிறந்த நாள்


பாரதியின் கையெழுத்தில் ஜய பேரிகை 
( படம்: http://tamilweek.com/thiruvedkai/archives/2090 - தளத்திலிருந்து)

 
தொடர்புடைய பதிவு:

1. மகாகவி பாரதியைப் பற்றிய வ. ராவின் புத்தகம் பற்றிய குறிப்பு.

Friday, October 25, 2013

கற்பித்தல் – ஒரு நரம்பியல் சார்ந்த புரிதல்

கற்பித்தல்  – ஒரு நரம்பியல் சார்ந்த புரிதல் (Teaching: A Neurological Perspective)

Learning to Love Math: Teaching Strategies That Change Student Attitudes and Get Results

Judy Willis, MD, MEd
Publisher: ASCD
Price: 16.00 USD


 கல்வியின் இலக்கு எதுவாக இருக்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான கேள்வி.   நீங்கள் எதைச் சொல்லித் தர முடிவெடுத்தாலும், அதை எப்படிச் சொல்லித் தருவதென்பது அதற்கிணையான இன்னொரு கேள்வி. முனைவர் ஜூடி வில்லிஸ் இந்தப் புத்தகத்தில் குழந்தைகளுக்கு எப்படிக் கற்பிப்பது என்ற கேள்விக்கு, நரம்பியல் அடிப்படையில் சில கருதுகோள்களையும்,  வீட்டிலும்/வகுப்பறைகளிலும் நடைமுறையில் பயன்படுத்தக் கூடிய வழிகளையும் முன்வைக்கிறார்.  


Friday, October 18, 2013

கல்வி என்பது ...


Think on these things

J. Krishnamurthy
Edited by D. Rajagopal
Harper and Row Publishers



இவை குறித்து சிந்தியுங்கள்

ஜெ. கிருஷ்ணமூர்த்தி

இந்த கட்டுரைத் தொகுப்பில் ஜெ.கே யின் அற்புதமான கட்டுரைகள் உள்ளன.

கல்வியைப் பற்றி ஜெ. கேயின் கட்டுரையின் தமிழாக்கம்*

கல்வி என்பது ...


நாம் எப்போதாவாது கல்வி என்றால் என்ன என சிந்தித்திருத்திருக்கோமா? ஏன் பள்ளிக்குச் செல்கிறோம்? ஏன் பல்வேறு பாடங்களைக் கற்கிறோம்? ஏன் தேர்வுகளில் பிறரை விட நல்ல மதிப்பெண்கள் பெற போட்டியிடுகிறோம்?

Thursday, October 3, 2013

ஞானமடைதல் என்ற புதிர் – பாகம் 2

ஞானமடைதல்   என்ற   புதிர்

யு ஜி கிருஷ்ணமூர்த்தி
கண்ணதாசன் பதிப்பகம்
விலை:  80 ரூபாய்

முந்தைய பதிவில்,  ஜே கிருஷ்ணமூர்த்தியின் வாழ்க்கைத் தத்துவத்தைக் கண்டோம்.

இப்போது  யு ஜி கிருஷ்ணமூர்த்திக்கு வருவோம்.






யு ஜி கிருஷ்ணமூர்த்தியின்  வாழ்க்கைத்  தரிசனம்:

சுருக்கமாய்,   யுஜி - ஞானமடைதல்,   பேரானந்தம்,   சுயத்தை அறிதல் -  என போதிக்கும் சகல தத்துவங்களையும்,   அவற்றை போதிக்கும் குருமார்களையும் நிராகரித்தார். குறிப்பாக, ஜே கிருஷ்ணமூர்த்தியின் தத்துவத்தை மூர்க்கத்தனமாக எதிர்த்தார்.

Monday, September 30, 2013

ஞானமடைதல் என்ற புதிர் - பாகம் 1

ஞானமடைதல்   என்ற   புதிர்
 
யு ஜி கிருஷ்ணமூர்த்தி

கண்ணதாசன் பதிப்பகம்
விலை:  80 ரூபாய்


இருபதாம் நூற்றாண்டில்,   இந்தியாவிலிருந்து தோன்றிய மகத்தான தத்துவ ஞானிகளுள் ஜே கிருஷ்ணமூர்த்தியும் (ஜேகே),   யு ஜி கிருஷ்ணமூர்த்தியும் (யுஜி)  அடக்கம்.   ஜேகே  உலகப்பிரசத்தியானவர்;    யுஜியை அறிந்தவர்கள் சிலரே.    பெயரை மீறி, இருவருக்கும் சில ஒற்றுமைகள் உண்டு.   இருவரும் சமகாலத்தவர்கள். தங்கள் தத்துவ விளக்கங்களில் மரபை உடைத்தெறிந்தவர்கள். ‘உலகை மீட்க வந்த மீட்பர்’   எனத் தத்துவ உலகம் ஜேகே-யை கொண்டாடிய போது,   ‘முதலில் இந்த உலகை மீட்பர்களிடமிருந்து (ஜேகே உள்பட) மீட்க வேண்டும்’  என்று சொன்னவர் யுஜி.  

Friday, September 6, 2013

பெருகும் வேட்கை

பெருகும் வேட்கை 
அழகிய பெரியவன்
வகை: கட்டுரைத் தொகுப்பு 
பதிப்பகம்:உயிர்மை
விலை: ரூ. 100/-

பரிந்துரை: கரிகாலன் /சண்முகம்





இந்தப் புத்தகம் அழகிய பெரியவன் எழுதிய இருபத்தி இரண்டு கட்டுரைகளின் தொகுப்பு. நேரடி அனுபவத்தைப் பின்புலமாகக் கொண்ட இந்தக் கட்டுரைகளில் பல உங்களை, சட்டென்று நிமிர்ந்து உட்கார வைக்கும். கட்டுரைகளில் பெரும்பாலானவை கல்வியைப் பற்றியும், சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்களைப் பற்றியும் பேசுபவை.



Wednesday, August 28, 2013

வால்மீகிக்கு இல்லாத தயக்கம் நமக்கு ஏன்?


1943இல் இருந்து காந்தி சுட்டுக் கொல்லப் பட்ட வரை, காந்தியிடம் செயலராகப் பணிபுரிந்த திரு.கல்யாணம் அவர்களின் அனுபவங்களைப் பின்புலமாக கொண்ட நாவல், ":ஆகஸ்ட் 15".  

இந்த நாவலைப் பற்றிய மதிப்பீட்டில் திரு. வெங்கட் சுவாமிநாதன் காந்தியைப் பற்றிய கறாரான விமரிசனங்களை முன்வைக்கிறார்.  

இந்த நாவலை படிக்கத் தூண்டும் மதிப்பீடு. 

Sunday, August 18, 2013

பெத்தவன்

 பெத்தவன், 40 பக்கங்கள்
ஆசிரியர் :  இமையம்
 பாரதி பதிப்பகம்


ஒரு spoiler alert :  இந்தக் கதை எழுதப்பட்டு ஓரிரு மாதங்களில் கதையில் உள்ளது போலவே தருமபுரி மாவட்டம் நத்தம் காலனி சம்பவம் நடைபெற்றது.  கடலூர் மாவட்டம் தொழுதூர் கிராமத்தில் ஆதி திராவிடர் நலத்துறை சார்ந்த பள்ளியில் ஆசிரியராக இருக்கும் இமையம் 'கோவேறு கழுதைகள்' மற்றும் 'ஆறுமுகம்' ஆகிய நாவல்கள் மூலம் புகழ் பெற்றவர்.  தாம் வாழும் மண்ணின் சமூக நிகழ்வுகளைத துணிச்சலாகப் படம் பிடித்துக் காட்டுவதால் அவரது எழுத்து யோக்கியமானதாக இருக்கிறது.

Thursday, August 15, 2013

ஆதியூர் அவதானி சரிதம்



 

ஆதியூர் அவதானி சரிம் 
வித்துவான் தூ.வி. சேஷையங்கார்
வகை: அம்மானை வடிவிலான நாவல்
விஜயா பதிப்பகம்
விலை: ரூ 60/-





கடந்த வருடம், விஜயா பதிப்பகத்தில் பல புத்தகங்கள் மொத்தமாக வாங்கிய பின்னர், பணம் கட்ட கீழே வந்த போது, கல்லாவில் இருந்த விஜயா பதிப்பக முதலாளி நான் வாங்கிய புத்தக்களைப் பற்றி பேச்சுக் கொடுத்துக் கொண்டே ரசீது எழுதினார்.